நாடாளும் ஆசை பிடித்த வல்லரசுகளின், முதல், இரண்டாம் உலகப் போரினால் பல்லாயிரக்கணக்கானோர் செத்து மடிந்தனர். நாகசாகி, ஹிரோஷிமாவில், வீசப்பட்ட அமெரிக்க அணுகுண்டால் பல்லாயிரக்கணக்கானோர் உயிர் இழந்ததுடன், அணுக கதிர் வீச்சினால்,பல்லாயிரக் கணக்கானோர், பல நோய்களால் பாதிக்கப்பட்டு அது அவர்கள் சந்ததிகளையும் இன்னமும் பாதித்துக்கொண்டிருக்கிறது.
எல்லா மதங்களும் அன்பையும், நல்ல நெறிகளையும் போதிக்கின்றன. இஸ்லாம், இந்து மதங்கள் தங்கள் மக்கள் அனைவரும் குடிப்பதையும், சூதாடுவதையும்,
போதைப் பொருள்களை உபயோகிப்பதையும் அடுத்தவரை கொலை செய்வதையும், தவறான செயல்கள் என்று சுட்டிக்காடியிருக்கின்றன. .
அதே நேரத்தில் இந்தியப் பெண்களும் மேல் நாட்டு நாகரீகத்தால் கவரப்பட்டு, கேளிக்கை விடுதிகளில் அரை, குறை ஆடை அணிந்து ஆபாச நடனம் ஆடுவதையும் நம்மால் எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும். அதற்காக அவர்களை, அடித்தா திருத்துவது? அன்பால், அறநெறியை போதித்துத்தான் அவர்களையும் திருத்தவேண்டும். ஆகவே மனித குலம், மதவெறியை அப்பால் வைத்துவிட்டு ஒருவருக்கொருவர் அழித்துவாழ்வதை மறந்து, மனித நேயத்தை பரப்பி சகோதர உணர்வுடன் வாழவேண்டும்.
திரு எஸ்.வி.ரமணி தன் தமிழ் உரையின் வாயிலாக் "You Tube" மூலம் இவற்றை விளக்கி உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக