Sonagiri Sami and Sallabha Sami.
சோணகிரி சாமியும் சல்லாப சாமியும்.
சோணகிரி சாமி,சல்லாப சாமியின் லீலைகளைப் பற்றி சற்றுக் கேளுங்கள். சொக்கபுரத்து சோணகிரி சாமி அறுபது வயதானவர். சைவத்தையும், தமிழையும் பற்றி புராணம் சொல்லி அலுத்துப் போய்விட்டார். அவரது தூங்கு மூஞ்சி மடத்திற்கு சொத்துக்கள் இருந்தாலும், அதை அவரால் கட்டிக் காத்து நிர்வகிக்க முடியவில்லை.
சாமியாராக இருந்தால் எடுபிடி செய்ய ஏவலாட்களும்,கால்பிடித்து,உடல் பிடிக்க இளம் பெண் சிஷ்யைகளையும் வைத்துக்கொண்டு உல்லாச வாழ்வு வாழலாம் என்று அவர் கணக்குப் போட்ட எண்ணங்களெல்லாம் கனவாகத்தான் முடிந்தது. சோணகிரி சாமியின் சிஷ்யன் மேதாவி, சல்லாப சாமியைப் பற்றி அவரிடம் கிசுகிசுத்தான். சல்லாப சாமி கிளர்ச்சியூட்டும் கவர்ச்சிப் பெண்களை எல்லாம் படுக்கை அறையில் நெருக்கமாக வைத்துக் கொண்டு,அவர்களுக்கு யோகா முறையில் இடுப்பு வலியை,கழுத்து வலியை, உடம்பு வலியை போக்கிவிட்டேன்னு உடான்ஸ் விட்டு,வெளி நாட்டு பக்தர்களுக்கும், தன் பக்தைகளைக் கொண்டு மசாஜ், யோகா செய்து கோடிக்கணக்கில் பணத்தைக் குவித்து பணம் சம்பாதிக்கிறார் என்ற சல்லாப சாமி செய்யும் கதைகளையெல்லாம் சோணகிரியிடம் சொல்லி, நம்ம சொக்கபுர ஆச்ரமத்திற்கும் அவரை அழைத்து உங்கள் சிஷ்யராக வைத்துக்கொண்டால், சொக்கபுரம்,சொர்கபுரமாக மாறி பணத்துக்குப் பணமும்,உங்கள் உடல் பிடித்து மசாஜ் செய்ய இளவயசு குட்டிகளும் சிஷ்யைகளாக கிடைப்பார்கள் என்று சொன்னான் மேதாவி. தொடர்ந்து வீடியோவில் எனது கதையைக் கேளுங்கள்.
போலிச்சாமியார்கள் வலையில் பொதுமக்கள் சிக்கக்கூடாது என்பதற்காகவே இதை சொல்லி உள்ளேன்.
This story was told on the faith that people should not fall victim to fake saints
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக