"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் "
S
“Great Jolly boy” S.V.Ramani interview in “Raj TV” on
15-2-2011 about Indian culture.
S.V.Ramani during his interview in “Raj TV” News
channel on
15-5-2011 has explained about Indian Culture, and told
during the invasion of Afghan emperors, the Hindu Temples in India were ransacked and the God ideals were
buried under the steps of Masjids in Delhi.
திராவிடர் இயக்கங்கள் பிராமணர் துவேஷத்தையே அடிப்படையாகக் கொண்டு வளர்ந்தன.
கலைஞர் கருணாநிதி கடந்த சில மாதங்களுக்கு முன், சட்டசபையில் பேசும் போது அரசியலில் நாகரிகம் போய்விட்டது என்று கூறி உள்ளார். அவர் கூற்றை ஊர்ஜிதப்படுத்துவதுபோல், தினந்தோறும் பல அநாகரீக நிகழ்ச்சிகள் தமிழகத்தில் நடை பெற்று வருகின்றன. சென்னை உயர் நீதி மன்ற வளாகத்தில், ஒரு சில பண்பாடற்ற வழக்கறிஞ்ர்கள், இந்திய மூத்த அரசியல்வாதியான சுப்ரமணிய சுவாமியின் மீது முட்டையை வீசி,சாதிப் பெயரைச்சொல்லி, தாக்குதல் நடத்தவே, அது தொடர்ந்து வழக்கறிஞ்ர்கள், காவலர்களுக்கு இடையே பெரும் போராக மூண்டு, காவல் நிலையம் தீ வைக்கப்பட்டு, பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். இத்தகைய நிகழ்ச்சிகள், திராவிட இயக்கங்கள் தோன்றிய காலத்திலிருந்தே நடை பெற்று வருவதை திரு எஸ்..வி. ரமணி "You Tube" மூலம் விளக்கி உள்ளார்.
ஆண்டவனின் உருவத்தை கல்லில் வடித்து வழிபடுவதே சிறப்புடையது ஆகும். கோயில்களில் பதிப்பிகப்படுகிற சிற்பங்கள் ஆகம விதிப்படி பிரிதிஷ்டை செய்யப்படும் வரை கற்சிலைகளாகத்தான் இருக்கும்.. பிரிதிஷ்டை செய்யப்பட்ட சிற்பங்கள் சக்தி பொருந்திய மூர்த்திகளாக மாறிவிடும். அந்த விக்ரகங்களை மூர்த்தி என்று அழைப்பதன் காரணம் யந்திர பிரிதிஷ்டை செய்வதால் உண்டாகும் தெய்வீக சக்தியே. யந்திர பிரிதிஷ்டை செய்வதை பிராண பிரிதிஷ்டை என்று சொல்வார்கள்.
இந்த விக்கிரகங்களுக்கு கிடைக்கும் மாபெரும் சக்தியை முழுமைப்படுத்துவதற்காகத்தான் கும்பாபிஷேகம் செய்கிறார்கள். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கும்பாபிஷேகம் செய்யப்படவேண்டும்.
கோயில்களில் தெய்வங்களை வணங்கும் முறை பற்றி திரு. எஸ்.வி.ரமணி தமிழில் "You Tube" மூலம் விளக்குகிறார்..
முஸ்தாபா-அபு- அல்- யாசித் என்னும் அல்-கொய்தா தீவிரவாதி, பாகிஸ்தானை, இந்தியா தாக்குமானால், மும்பை தாக்குதலைப் போன்று பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இந்தியாவுக்கு எச்கரிக்கை விடுத்திருக்கிறான். இந்தியா பாகிஸ்தான் ம்ண் மீது என்றுமே ஆசைப்பட்டதில்லை.
ஆனால், இந்திய மண் மீதும், செல்வங்கள் மீதும் ஆசை வெறி பிடித்து, இந்தியாவின் மேல் படையெடுத்த கஜ்னி, பாபர் போன்றவர்கள், இலட்சக்கணக்கான இந்தியர்களைக் கொன்று இந்தியக் கோயில்களை இடித்து, இந்தியச் செல்வங்களை கொள்ளை அடித்து, அள்ளிச் சென்றனர்.
இந்தியர்கள் என்றுமே மற்றவர்கள் மத சுதந்திரத்திலும், செல்வங்கள் மீதும் ஆசைப் பட்டது கிடையாது. இந்திய முஸ்லீம்களை சகோதரர்களாகத்தான்,இந்திய இந்து மதத்தார் நினைத்துப் பழகுகின்றனர். முஸ்தபா தன் தீவிரவாதப் போக்கை விட்டுத் திருந்தவேண்டும்.
இதையே திரு எஸ்.வி.ரமணி "You Tube" ல் விளக்குகிறார். .
கலைஞர் கருணாநிதி எல்லா மதத்தாரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டும்.
ஆன்மிகவாதிகளால் நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மை என்றால், அவர்களுடன் உறவாடுவதில் தப்பில்லை என்று சென்னையில் 2-2-2007 அன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கருணாநிதி பேசியிருக்கிறார். அதோடு மட்டுமல்ல "குடியரசு" பத்திரிக்கையை வெளியிட்டவர் ஞானியார் என்ற ஆன்மிகவாதிதான் என்று கூறி உள்ளார்... மற்ற விபரங்களை திரு எஸ்.வி.ரமணி 'You Tube'ல் விளக்கிப் பேசி உள்ளார்.
பஞ்சாப் சிங்கம் மாவீரன் பகத் சிங்கும், தமிழ் ஈழ விடுதலைப்புலிகளும்.
துப்பாக்கி முனையில் ஆள நினைப்பவர்கள், நீண்ட காலம் நிலைத்து ஆட்சி நடத்தியதாக வரலாறு கிடையாது, என்பதை இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு நமக்கு நினைவூட்டுகிறது. இதை இலங்கையை ஆள்பவர்களும் உணர்ந்து தங்களை திருத்திக் கொள்ளவேண்டும்.
இதையே திரு எஸ்.வி.ரமணி "You Tube" ல் விளக்குகிறார். .
கயாவிற்கு அருகில் இருந்த போதி மரத்தடியில் நீண்டநாட்கள் தியானத்தில் ஆழ்ந்து, மனித குலத்தில் ஏழை, பணக்காரன், ஆண்டான், அடிமை என்ற பாகுபாடு இல்லாத நிலையை ஏற்ப்படுத்த எண்ணம் கொண்டார். வறியவர்களிடத்தில் அன்பு, கருணை, அனுதாபத்துடன் நடந்து கொண்டு, அவர்களையும் சரி நிகர் சமானமாக வாழவைக்கவேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டு, நாற்பத்தி ஐந்து ஆண்டுகள் உலகெங்கும், தன் எண்ணங்களை பரப்பி, கிருஸ்து பிறப்பிற்கு 486 ஆண்டுகளுக்கு முன் தன் எண்பதாவது வயதில் மரணமடைந்தார்.
திரு எஸ்.வி.ரமணி கெளதம புத்தரின் வாழ்க்கையை "You Tube" மூலம் உங்களுக்கு தமிழில் எடுத்துச் சொல்கிறார். .
அந்தணர்களுக்கும் இட ஒதுக்கீட்டில் நியாயம் வேண்டும்.
தமிழக அந்தணர்கள், தமிழ் நாட்டின் நல் வாழ்வுக்காகவும், தமிழ் மொழி, நாட்டியம், இசை, மற்றும் தமிழ் இலக்கியங்களின் வளர்ச்சிக்காக, பாடுபட்டதையும், தமிழ் நாட்டின் திருக்கோவில்களில் இறைவன் திருப்பணிகளில் ஈடு பாடு கொண்டு உழைப்பதையும், இந்திய விடுதலைக்காக, பாடு பட்டதையும், இறந்தவர்களின் சடங்க்குகளைச்செய்வதையும் அனைத்து மக்களும் அறிவார்கள். அத்தகைய அந்தணர்களில் ஏழ்மை நிலையில் இருக்கும் பல இலட்சக் கணக்கானோர் , உயர்ந்த வகுப்பினர் என்ற காரணத்தினால், கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் புறக்கணிக்கப்பட்டு, வறுமை நிலையில் வாடுகிறார்கள். பின் தங்கிய வகுப்பில் இருக்கும் பலர் செல்வந்தராக இருக்கும்போதும் அவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பெயரில் சலுகைகள் தாராளமாக வழங்கப்படுகின்றன. ஆகவே ஏழை பிராமணர்களுக்கும் ஏழு சதவிகித இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கிறார் திரு எஸ்.வீ.சேகர் எம்.எல்.ஏ. இதையே திரு எஸ்.வி.ரமணி "You Tube" ல் விளக்குகிறார். .