ஜனநாயகப் படுகொலைகள்....!
2006 ம் ஆண்டு 13 ம் தேதி அக்டோபரில் நடந்தம் சென்னை மாநகராட்சித் தேர்தலில், ஆளும் கட்சியின் தலைவர்கள் குண்டர்கள் படையுடன் ஓட்டுச்சாவடிகளைக் கைப்பற்றி ஜனநாயகக் கடமையாற்ற வந்த பொது மக்களை அடித்து விரட்டித் தாங்களே ஓட்டுக்களை, தங்கள் ஓட்டுப்பெட்டிகளில் அள்ளிப் போட்டுக்கொண்டு, வெற்றி வாகை சூடியதாக விழா எடுத்து மகிழ்ந்தனர். நீதி மன்றம் இந்தப புனிதர்கள் நடத்திய தேர்தல்களில், தில்லு முல்லுகள் நடந்ததைச் சுட்டிக்காட்டி மீண்டும் 99 வார்டுகளுக்கு தேர்தல் நடத்த உத்திரவிட்டது. 13-2-2007 நடை பெற்ற 67 வார்டுகளில் மக்கள் ஓட்டுப் போடவே வரப் பயந்தார்கள்.
பிரதான எதிர் கட்சிகளான அ. தி.மு.க, ம.தி.மு.க போன்றவர்கள் தேர்தலில் பங்கெடுக்காமல் போனதும், பா.ஜ.க. தே.மு.தி.க போன்ற பண்புடைய கட்சியினர் தங்களை தட்டிக் கேட்க மாட்டார்கள் என்ற தைரியத்திலும், ஆளும் கட்சியின் பாடு இந்தத் தேர்தலிலும் கொண்டாட்டமாக அமைந்தது. வழக்கம் போலவே ஆளும் கட்சியினரால் கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டதை பத்திரிகைகள் படம் பிடித்துக் காட்டின.
தன்னைத் தமிழினக் காவலராகச் சொல்லிக்கொள்ளும் கலைஞர் கருணாநிதி, தனது கட்சியினர் இதைப் போன்ற தரம் தாழ்ந்த செயல்களில் இறங்கி ஜனநாயக நெறிமுறைகளை படுகொலை செய்யத் துடிப்பதை பார்த்துக் கொண்டிருப்பது ஏன்? என்று புரியவில்லை.
ஜனநாயகத்தை படுகொலை செய்து அடி, தடி, கள்ள ஓட்டுப் போடுவதன் மூலமும், இலஞ்சம் கொடுத்தும், மற்றக் கட்சியினரை மிரட்டி தன்னோடு சேரவைப்பதன் மூலமும் தான் ஆட்சியை பிடிக்க முடியும் என்ற புதிய பகுத்தறிவு சித்தாந்தத்தை, நமது வருங்கால சந்ததிகள் கற்றுக் கொள்ள வேண்டிய நிலை இன்று தமிழகத்தில் ஆளுங்கட்சியினரால் உருவாகி உள்ளதை நினைத்தால், ஜனநாயகம் எப்படி பிழைக்கப் போகிறது? என்ற ஏக்கம்தான் நம் நெஞ்சை விட்டு நீங்காமல் நிற்கிறது.
இதையே திரு எஸ்.வி.ரமணி "You Tube" ல் தமிழில் விளக்குகிறார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக